சுடச்சுட

  

  சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

  By கிருஷ்ணகிரி,  |   Published on : 24th November 2013 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பதாக, மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தெரிவித்தார்.

  இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  தமிழ்நாட்டில், சிறுபான்மையினர்களாகக் கருதப்படும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சியர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம், தொழில் தொடங்குவதற்கு பல்வேறு கடன் உதவித் திட்டங்களை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தி வருகிறது.

  இதன் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர் கடன், கல்விக் கடன், கறவை மாடுக் கடன், ஆட்டோ கடன் மற்றும் சிறு கடன்கள் வழங்கப்படுகின்றன.

  கடன் உதவி கோரும் விண்ணப்பப் படிவம் எவ்வித கட்டணமும் இன்றி மாவட்ட, மத்திய, நகரக் கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

  மேலும் விவரங்களுக்கு மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரையோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட, மத்திய, நகரக் கூட்டுறவு வங்கிக் கிளைகளையோ அல்லது மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளரையோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai