சுடச்சுட

  

  தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

  தருமபுரியில் கடந்த சில நாள்களாக அதிகாலை நேரத்தில் பனி மூட்டமும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்து வந்தது.

  இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு, சனிக்கிழமை அதிகாலையில் மாவட்டத்தில் பரவலாக மழை பொழிந்தது.

  மாவட்டத்தில் பெய்த மழையளவு (சனிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழையளவு நிலவரம் மி.மீட்டரில்): தருமபுரி 7 மி.மீ., பாலக்கோடு 17.40, மாரண்டஅள்ளி 5, பென்னாகரம் 6,  ஒகேனக்கல் 16.30. மாவட்டத்தின் சராசரி மழையளவு 7.39 மி.மீ.

  கிருஷ்ணகிரியில்... கிருஷ்ணகிரி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை 22.2 மி.மீ. மழையளவு பதிவானது.

  மழைநீர் வடிகால் கால்வாய் இல்லாத பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான பதிவான மழை அளவு (மி.மீ.): சூளகிரி 8, தளி 5, தேன்கனிக்கோட்டை 4.2, அஞ்செட்டி 4, நெடுங்கல் 2.4, ஊத்தங்கரை  2.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai