சுடச்சுட

  

  மாவட்ட நேரு இளையோர் மையம் சார்பில், மத்தூர் ஊராட்சி ஒன்றியம், கஞ்சனூர் தொடக்கப் பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு வார விழா நடைபெற்றது.

  பள்ளித் தலைமையாசிரியர் சி.வீரமணி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், வென்ற மாணவ, மாணவிகளுக்கு நேரு இளையோர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் திருநீலகண்டன் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.

  நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் மாது அப்பாசாமி, உறுப்பினர் கல்பனா ஆறுமுகம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ஜானகி முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்றோர் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை ஏற்றனர்.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai