சுடச்சுட

  

  மங்களூர் துறைமுக முற்றுகை போராட்டம்:தமிழக விவசாயிகள் சங்கம் பங்கேற்க முடிவு

  By கிருஷ்ணகிரி,  |   Published on : 24th November 2013 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காட் ஒப்பந்தத்தை மத்திய அரசு ஏற்கக் கூடாது என வலியுறுத்தி தென்னிந்தியாவில் உள்ள விவசாயிகள் சங்கம் சார்பில், டிச.6-இல் நடைபெறும் மங்களூர் துறைமுகம் முற்றுகையிடும் போராட்டத்தில் கிருஷ்ணகிரியிலிருந்து விவசாயிகள் பங்கேற்பது என தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

  தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தச் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் சுப்பிரமணிய ரெட்டி தலைமை வகித்தார். இதில், மாநிலப் பொதுச் செயலாளர் கே.எம்.ராமகவுண்டர், மாவட்ட ஆலோசகர் நசீர் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  ஜெனிவாவில் நடைபெறும் மாநாட்டில் காட் ஒப்பந்தத்தில் இந்திய கையெழுத்து இடக்கூடாது என வலியுறுத்தி, தென்னிந்திய விவசாயிகள் சார்பில் கர்நாடக மாநிலம் மங்களூரில் டிசம்பர் 6-ஆம் தேதி துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துகின்றனர். இதில், கிருஷ்ணகிரியிலிருந்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திரளாக பங்கேற்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  அலுவலக இடமாற்றம்

  கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் இதுவரை இயங்கி வந்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைமை அலுவலகம், கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள தொழில்பேட்டையில் செயல்படும் என அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.எம்.ராமகவுண்டர் தெரிவித்தார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai