சுடச்சுட

  

  கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மெகா லோக் அதாலத் முகாமில் 10,621 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டதாக, மாவட்ட நீதிபதி எல்.யூசூப் அலி சனிக்கிழமை தெரிவித்தார்.

  கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு தலைமை வகித்து மாவட்ட முதன்மை நீதிபதி எல்.யூசூப் அலி பேசியது:

  யாவருக்கும் நீதி பெற சம வாய்ப்பு என்ற நோக்கத்தை நிறைவேற்றும் வாய்ப்பு இந்த மக்கள் நீதிமன்றமான லோக் அதாலத்துக்கு கிடைத்துள்ளது.

  உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின் படி வெள்ளிக்கிழமை வரை 10,621 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், இந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 15 ஆயிரம் வழக்குக்கு மேல் தீர்வுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.

  இந்த வாய்ப்பை வழக்குரைஞர்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறையினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

  மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் பேசியது:

  லோக் அதாலத் மூலம் மாவட்டத்தில் நீண்ட காலமாகத் தீர்வுக்காக காத்திருக்கும் வழக்குகளுக்கு விரைவில் நீதி கிடைக்க வழி வகுத்துள்ளது.

  இதனால், ஏழை எளிய மக்கள் பயனடைவர். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

  இந்த முகாமில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார், தலைமை குற்றவியல் நீதிபதி ஆர்.தமிழரசன், முதன்மை சார்பு நீதிபதி எம்.சஞ்சீவி பாஸ்கர், இந்தியன் வங்கி மண்டலப் பொது மேலாளர் எஸ்.செல்வராஜ், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எம்.தேவராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai