சுடச்சுட

    

    வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 24th November 2013 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்டத்தில் நிகழாண்டில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தாய் திட்டம், பசுமைக் குடில் திட்டம், இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டம், சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், தன்னிறைவுத் திட்டம், ஊரக உள்கட்டமைப்புத் திட்டம் உள்ளிட்ட 20 திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தொகுதி அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, திட்டப் பணிகளை அறிவித்தபடி உரிய காலத்திற்குள் தரமாகவும், விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

    இதில், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் ப.மந்திராசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வி.கோபாலகிருஷ்ணன், பி.எம்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai