சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி அருகே ஞாயிற்றுக்கிழமை டிராக்டர் கவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழந்தார்.

  கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பெரியமனவாரனப்பள்ளியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (27). பாகலூர் அருகே உள்ள மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த ஹரிஷிடம் டிராக்டர் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவருக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

  இந்த நிலையில், தனது குடும்பத்தை பெரியமனவாரனப்பள்ளிக்கு மாற்றுவதற்காக வீட்டுப் பொருள்களை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு மல்லசமுத்திரத்திலிருந்து புறப்பட்டார்.

  கே.என்.போடூர் அருகே மலைப் பாதையில் சென்ற போது டிராக்டர் நிலை தடுமாறி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  தகவலறிந்த வேப்பனபள்ளி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai