Enable Javscript for better performance
பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 25th November 2013 05:18 AM  |   அ+அ அ-   |    |  

    பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என, வருவாய் கிராம ஊழியர்கள் வலியுறுத்தினர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார்.  மாநிலச் செயலாளர் ஜெயராமன், மாவட்டச் செயலாளர் லட்சுமணன், பொருளாளர் வெங்கடேசன் கிளைச் செயலாளர்கள் சின்னசாமி, பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தகுதி வாய்ந்த கிராம உதவியாளர்களுக்கு கல்வி, பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    kattana sevai