சுடச்சுட

    

    வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்

    By ஒசூர்,  |   Published on : 25th November 2013 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என, ஒசூரில் நடைபெற்ற அனைத்து சமுதாயப் பேரியக்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஒசூரில் அனைத்து சமுதாய பேரியக்க ஆலோசனைக் கூட்டம் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜி.கே.மணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தவதைத் தடுக்க சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் 15 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 சத வழக்குகள் கூட உண்மையில்லை எனத் தெரிய வந்தது. பெண்கள் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதத்தை  கட்டாயமாக்க வேண்டும். தமிழகத்தில் மாணவிகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கல்வி, வேலைவாய்ப்பில் உரிய பங்களிப்பு கிடைக்க சரியான இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்  உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், கொங்கு வேளாளக் கவுண்டர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜி.கே.நாகராஜன், பாமக மாநிலப் பொதுச் செயலாளர் தேவராஜன், மாவட்டச் செயலாளர் அருண்ராஜன், நகரத் தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai