சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மாவட்டம், பளேத்தோட்டம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

    விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் சரவணன் தலைமை வகித்தார்.

    பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் தணிகாசலம், துணைத் தலைவர் செல்வம், ஊராட்சி மன்றத் தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மாதேசன் வரவேற்றார்.

    மாவட்டக் கல்வி அலுவலர் முருகேசன், தொடக்கக் கல்வி அலுவலர் துரைசாமி, பள்ளித் துணை ஆய்வாளர் சென்னப்பன் ஆகியோர் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினர்.

    தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

    ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வெங்கடாசலம், ரமேஷ், இளையராஜா, சரிதா, உதயலட்சுமி, ராஜேந்திரன் ஆகியோர் செய்தனர். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai