சுடச்சுட

  

  கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் மனு

  By கிருஷ்ணகிரி  |   Published on : 26th November 2013 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரி நகரில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, கீழ்சோமார்பேட்டையைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

  மனு விவரம்:  கிருஷ்ணகிரி புற நகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள கீழ்சோமார்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்தக் குடியிருப்பிலிருந்து கழிவுநீர் வெளியேறும் வகையில் சாலையோரத்தில் கால்வாய் வசதி இருந்தது. தற்போது அந்தக் கால்வாயை, தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். இதனால், குடியிருப்புப் பகுதியிலிருந்து கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது.

  ஆக்கிரமிப்பை அகற்றி கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai