சுடச்சுட

  

  காலபைரவர் ஜெயந்தி விழா, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி பழையபேட்டை காலபைரவர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

  கிருஷ்ணகிரி பழையபேட்டையை அடுத்த பெரிய ஏரியின் மேற்கு கோடிக் கரையில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் காலபைரவர் ஜெயந்தி விழா, தேய்பிறை அஷ்டமி பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

  இதில் பங்கேற்ற பக்தர்கள் வெள்ளைப் பூசணியில் தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர்.

  கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்தச் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.

  இந்த விழாவை முன்னிட்டு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai