Enable Javscript for better performance
ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 26th November 2013 04:50 AM  |   அ+அ அ-   |    |  

    தேன்கனிக்கோட்டை பகுதியில் வசிக்கும் தொரையர் இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி, கிருஷ்ணகிரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டச் செயலாளர் வி.ரவி தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலாளர் ஏ.டி.கண்ணன், மாவட்டத் தலைவர் எம்.வினோத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியில் பரவலாக கன்னட மொழி பேசும் தொரையர் சமுதாய மக்களுக்கு மிகவும் பிற்பட்டோர் பிரிவில் ஜாதி சான்றிதழ் வழங்க மறுக்கப்படுவதாகவும், இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியரைக் கண்டித்தும், ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai