Enable Javscript for better performance
மணல் கடத்திய டிராக்டர், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    மணல் கடத்திய டிராக்டர், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 26th November 2013 04:50 AM  |   அ+அ அ-   |    |  

    கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் அருகே மணல் கடத்தியதாக, 5 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய டிராக்டர், ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன.

    பர்கூர் அருகே உள்ள ஓவிக்குப்பம் ஏரியில் மணல் கடத்தப்படுவதாக பர்கூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, கந்திக்குப்பம் காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி, உதவி ஆய்வாளர் அமுதா உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது, ஏரியிலிருந்து ஜேசிபி இயந்திரம் மூலம் மண் அள்ளப்பட்டதும், டிராக்டர் மூலம் மணல் கடத்தியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து, டிராக்டர், ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிராக்டர் உரிமையாளர் நாராயணன் (35), ஓட்டுநர் சேகர் (30), ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் சித்தையன் (60), ஓட்டுநர் ரகு (30), இதற்கு உதவியதாக ராஜேந்திரன் ( 30) ஆகிய ஐந்து பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நாராயணன், சேகர் இருவரும் சகோதரர்கள் ஆவர்.

    kattana sevai