சுடச்சுட

  

  மாணவிகள் வசூலித்த கொடி நாள் நிதி ஆட்சியரிடம் அளிப்பு

  By கிருஷ்ணகிரி,  |   Published on : 26th November 2013 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  : காவேரிப்பட்டணம் அரசுப் பள்ளி மாணவிகள் வசூலித்த கொடி நாள், தொழு நோய் நிதியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர் டி.பி ராஜேஷிடம் திங்கள்கிழமை அளித்தார்.

  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.

  இதில், காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தொழு நோய் நிதி ரூ.31 ஆயிரம், கொடி நாள் நிதி  ரூ.47,700 என மொத்தம் ரூ.78,700-யை பொதுமக்களிடம் வசூலித்தனர். இந்த நிதியை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி, ஆட்சியர் டி.பி.ராஜேஷிடம் அளித்தார்.

  உடன், மாவட்ட வருவாய் அலுவலர் ப.பாலசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் ப.மந்திராசலம், காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கி.ராஜேஸ்வரி உள்ளிட்டோர் இருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai