சுடச்சுட

  

  ஒசூரில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 6,570 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

  இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 646 வழக்குகள், சிறு வழக்குகள் 80, 5,500 போக்குவரத்து விதி மீறி வாகனம் ஓட்டியது உள்பட 6,570 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது.

  ஒசூர் முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராமகிருஷ்ணன், இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரன், இரண்டாவது விரைவு நீதிமன்ற நீதிபதி குமரவர்மன் ஆகியோர் இந்த வழக்குகளுக்குத் தீர்வு கண்டனர்.

  ஒரே நாளில் 6,570 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது இதுவே முதல் முறை என, டி.எஸ்.பி கோபி தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai