Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் மடிக் கணினி திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில், ரூ.1 லட்சம் மதிப்புள்ள 4 மடிக் கணினிகள் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஆம்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை தமிழரசி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்ததும் பள்ளியைப் பூட்டி விட்டு, அங்கு பணிபுரியும் ஆயாவிடம் வழக்கம் போல சாவியைக் கொடுத்து விட்டு வீட்டுக்குச் சென்றாராம்.

    திங்கள்கிழமை காலை வழக்கம் போல அவர் பள்ளியைத் திறக்கும் போது, பள்ளிக் கதவுகள் பூட்டிய நிலையிலேயே இருந்ததாம். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 4 மடிக் கணினிகளைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த தலைமையாசிரியை தமிழரசி, மத்தூர் காவல் நிலைத்தில் புகார் அளித்தார். 4 மடிக் கணினியின் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai