Enable Javscript for better performance
ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று சான்றிதழ் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று சான்றிதழ் அளிப்பு

    Published on : 27th November 2013 02:52 AM  |   அ+அ அ-   |    |  

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கானத் தகுதிச் சான்றிதழ் வழங்கும் பணி புதன்கிழமை (நவ.27) தொடங்குவதாக, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. ராமசாமி தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், தகுதி பெற்ற ஆசிரியர்களுக்குத் தேர்வு வாரியம் மூலம் தாள் 1, தாள் 2- இல் தேர்ச்சி பெற்றதுக்கான சான்றிதழ் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கலை அரங்கில் புதன்கிழமை முதல் வழங்கப்படுகிறது. 

    கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தைச் சேர்ந்த பணிநாடுநர் மட்டும் நேரில் வந்து சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நுழைவுச் சீட்டின் நகல், சான்றிதழ் சரிபார்பிற்கான அழைப்பாணை கடித நகல், நியமனம் பெற்றிருப்பின் நியமன ஆணையின் நகல் ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai