சுடச்சுட

  

  நிலத் தரகர்களை அமைப்புச் சாராத் தொழிலாளர் நல வாரியத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் தமிழக நிலத் தரகர்கள் நலச் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சி.அண்ணாதுரை தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் என்.சம்பத், துணைத் தலைவர் பி.கௌரப்பன், இணைத் தலைவர் சி.மைக்கேல்ராஜ், மாவட்டத் தலைவர் எஸ்.தாஜ், செயலாளர் கே.ஏ.அக்பர்பாஷா, பொருளாளர் கே.சி.வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  நிலத் தரகர்களை தமிழ்நாடு அமைப்புச் சாராத் தொழிலாளர் நல வாரியத்தில் இணைக்க வேண்டும். பத்திரம் எழுதுபவர்களுக்கு தமிழக அரசு பதிவு எண் வழங்குவதைப் போல, நிலத் தரகர்களுக்கும் பதிவு எண் வழங்க வேண்டும்.  மூத்த தரகர்களுக்கு மாதம் தோறும் அரசு உதவித் தொகை வழங்க வேண்டும்.  வீடு இல்லா நிலத் தரகர்களுக்கு பசுமை வீடு கட்டித் தர வேண்டும்.

  உயர்த்தப்பட்ட நில வழிகாட்டி மதிப்பைக் குறைக்க வேண்டும்.  மருத்துவச் சான்றிதழ் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai