சுடச்சுட

    

    நீதிமன்றம் வரும் போது தப்பி ஓட முயன்ற கைதிக்கு 2 ஆண்டு சிறை

    By dn  |   Published on : 27th November 2013 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரும் போது கைதி தப்பி ஓட முயன்ற வழக்கில், கைதிக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை செவ்வாய்க்கிழமை வழங்கியது.

    கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியைச் சேர்ந்தவர் நவீன் (24). பல்வேறு வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக நவீனை வேலூர் சிறையிலிருந்து கிருஷ்ணகிரி நீதிமன்றத்திற்கு போலீஸார் அழைத்து வந்தனர். அப்போது, போலீஸ் வாகனத்திலிருந்து அவர் தப்பி ஓட முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், அவரை விரட்டிச் சென்று பிடித்தனர். இதுகுறித்து பாதுகாப்புக்கு வந்த போலீஸார் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

    இந்த வழக்கு கிருஷ்ணகிரி சார்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்குரைஞர் ஜெயகுமார் ஆஜரானார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவி பாஸ்கர், கைதி நவீனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai