சுடச்சுட

  

  பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உரியப் பாதுகாப்பை அதன் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தெரிவித்தார்.

  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் பேசியது:

  நகரப் பேருந்துகளில் முன்புறம் வழியாக பெண், குழந்தைகளை ஏற்றி, இறக்க வேண்டும். பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத உரிமையாளர் அல்லது கொள்முதல்தாரர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

  ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் தான் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். மீறி செயல்படுவோரின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். பேருந்துகள், வாகனங்களில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு வன்முறைகள் நேர்ந்து காவல் துறையில் புகார் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப.பாலசுப்பிரமணியன், ஓசூர் சார் ஆட்சியர் பிரவீன் பி.நாயர் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai