சுடச்சுட

    

    ஒசூர் அருகே மனைவியிடம் ரூ.20 லட்சம் வரதட்சிணை கேட்ட கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே மூக்கண்டபள்ளி பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (32). இவரது கணவர் பாபு (எ) பாலகிருஷ்ணன் (35). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகின்றன.

     இந்த நிலையில், மல்லிகாவிடம் கணவர் பாபு அடிக்கடி வரதட்சிணை கேட்டதாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மல்லிகா அளித்த புகாரில் கூறியுள்ளதாவது:

    எங்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. திருமணமான சில மாதங்களுக்குப் பிறகு, எனது கணவர் வரதட்சிணை கேட்டு தொந்தரவு செய்தார். இதையடுத்து, எனது பெற்றோர் ரூ.20 லட்சம் கொடுத்தனர். அந்தப் பணத்தை வைத்து தொழில்சாலை தொடங்கினார். சமீபத்தில் அந்தத் தொழில்சாலையையும் விற்று பணத்தைப் பெற்றுள்ளார்.

    இந்த நிலையில், மீண்டும் என்னிடம் ரூ.20 லட்சம் வரதட்சிணை கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வருகிறார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இதன் பேரில், ஆய்வாளர் சித்ராதேவி வழக்குப் பதிந்து பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai