சுடச்சுட

  

  ஊத்தங்கரை, நவ.26:  ஊத்தங்கரை வட்டத்தில் அண்மையில் நடைபெற்ற விரைவுப் பட்டா மாறுதல் முகாமில், 222 பேருக்கு ஆணை அளிக்கப்பட்டது.

  கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது. இதில், பெறப்பட்ட மனுக்களில் உள்பிரிவுக்கு உள்பட்ட மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, 222 மனுக்களுக்கு ஆணை வழங்கப்பட்டது. மீதியுள்ள மனுக்கள் பரிசீலனை செய்து ஆணை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

  முகாமுக்கு, வட்டாட்சியர் அ.அப்துல்முனீர் தலைமை வகித்தார். நில அளவை வட்டத் துணை ஆய்வாளர் ராஜேந்திரசிங், துணை வட்டாட்சியர் பிரேம் நசிர், பிர்கா நில அளவையர்கள் ராதாகிருஷ்ணன், சிவா, சார் ஆய்வாளர்கள் விஜயரங்கன், சின்ராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  முதுநிலை வரைவாளர் விவேகானந்தன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai