சுடச்சுட

    

    ஒசூர் உழவர் சந்தையில் சார்-ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை திடீர் ஆய்வு செய்தனர்.

    ஒசூர் உழவர் சந்தையில் விவசாயிகளின் பெயரில் வியாபாரிகள், காய்கறிகளைக் கூடுதல் விலைக்கு விற்பதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, ஒசூர் சார் - ஆட்சியர் பிரவீன் பி.நாயர், வட்டாட்சியர் அமீதுல்லா மற்றும் வருவாய்த் துறையினர் புதன்கிழமை திடீர் ஆய்வு செய்தனர். உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பவர்கள் உரிய அடையாள அட்டை வைத்துள்ளனரா, விலைப் பட்டியலில் உள்ள விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்கின்றனரா, என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai