Enable Javscript for better performance
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 28th November 2013 05:34 AM  |   அ+அ அ-   |    |  

    காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, கிருஷ்ணகிரியில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சார்பில், புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.வி.ராஜா தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ரா.சுந்தரபாஸ்கர், மாவட்டச் செயலாளர் சையத் பயாஸ் அகமது, மாவட்டத் துணைத் தலைவர் ரா.துரைசாமி, ஊராட்சி உதவியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், கணினி உதவியாளர்கள், முழுச் சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்கள் எழுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai