சுடச்சுட

  

  ஏரிகளுக்கு தண்ணீர் விடக் கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்

  By கிருஷ்ணகிரி,  |   Published on : 28th November 2013 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  : போச்சம்பள்ளி வட்டத்திலுள்ள 25 ஏரிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் விடக் கோரி, தமிழக விவசாயிகள் சங்கத்தினர், கிருஷ்ணகிரியை அடுத்த வேலம்பட்டியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

  கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், மத்தூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் இடது புற கால்வாயை விரிவுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

  இதன்மூலம், சென்றாம்பட்டி, தட்டக்கல், நாகரசம்பட்டி, அப்புக்கொட்டாய், வெலங்காமுடி, வேருப்பள்ளி, மல்லிக்கல், கரடியூர், அமணக்கம்பட்டி, வீரமலை, தொப்படிகுப்பம், ராமபுரம், ஜிம்மாண்டியூர் உள்ளிட்ட 25 ஏரிகள் நீர் ஆதாரத்தைப் பெறுகின்றன.

  தற்போது இந்தக் கால்வாயை விரிவுப்படுத்தும் பணி நிறைவடைந்த நிலையில், இந்த ஏரிகளுக்கு கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு நீரைத் திறந்து விடக் கோரி, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வேலம்பட்டி கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

  போராட்டத்துக்கு வட்டச் செயலாளர் டி.எம்.நடராஜன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் எம்.லகுமையா, மாவட்டச் செயலாளர் எஸ்.கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் கே.நரசிம்மன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாநிலத் துணைச் செயலாளர் லலிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  உண்ணாவிரதத்தில் பங்கேற்றோர் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடுவதன் மூலம், விவசாயப் பணிகளை மேற்கொள்வதுடன் குடிநீர் பிரச்னையையும் தீர்க்கலாம்  என வலியுறுத்தினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai