சுடச்சுட

  

  ஈரோட்டில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான குங்ஃபூ போட்டியில் கிருஷ்ணகிரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

  தென்னிந்திய அளவிலான குங்ஃபூ போட்டிகள் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றன. இதில், கிருஷ்ணகிரி பாரத் குங்ஃபூ பள்ளியைச் சேர்ந்த 39 மாணவ, மாணவிகள் பயிற்சியாளர் எஸ்.ஏ.ரஹமத் தலைமையில் பங்கேற்றனர்.

  போட்டியில் பங்கேற்ற மாணவர்களில் 14 பேர் தங்கப் பதக்கமும், 8 பேர் வெள்ளிப் பதக்கமும், 7 பேர் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களை குங்ஃபூ பள்ளித் தலைவர் மதியழகன் பாராட்டினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai