சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் பெண்ணைக் கொன்ற தொழிலாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

    பர்கூர் இருளர் காலனியைச் சேர்ந்தவர் பானு (25). ஆந்திர மாநிலம், குப்பத்தைச் சேர்ந்தவர் மாதேஷ் (40). இவர்கள் இருவரும் பர்கூரில் வசித்தனர்.

    இருவரும் அங்குள்ள ஒரு செங்கல் சூளையில் பணிபுரிந்தனர். இந்த நிலையில், மல்லப்பாடி அருகே விவசாயி நாகமூப்பனுக்குச் சொந்தமான விளை நிலத்தில் புதன்கிழமை பானு கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார்.

    போலீஸார் விசாரணையில், பானுவை, மாதேஷ் கொலை செய்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து பர்கூர் போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவான மாதேஷை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai