சுடச்சுட

  

  "மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்'

  By கிருஷ்ணகிரி,  |   Published on : 28th November 2013 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசுப் பொதுத் தேர்வில் மொழிப் பாடத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை மாணவர்களிடம் ஏற்படுத்துங்கள் என, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி தெரிவித்தார்.

  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் மொழிப் பாடத்தில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில், தமிழ் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்றது.

  நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. ராமசாமி பேசியது:

  அரசுப் பொதுத் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை முதலில் அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அதேபோல, தமிழ் மொழிப் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களிடம் அதிகக் கவனம் செலுத்துவதன் மூலம் மாவட்டத்தில் தமிழ் மொழியில் தேர்ச்சியை அதிகரிக்க முடியும் என்றார்.

  இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலர் முருகேசன், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சின்னராஜ், பள்ளித் துணை ஆய்வாளர் கே.சென்னப்பன், கருத்தாளுநர்கள் மா.தமிழ்செல்வி, சி.செங்குட்டுவன் உள்ளிட்டோர் பயிற்சி வழங்கினர்.

  வியாழக்கிழமை  (நவ.28) ஆங்கிலமொழி ஆசிரியர்களுக்கும், வெள்ளிக்கிழமை (நவ.29) கணிதம், வணிகவியல் பாடத்தின் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும்  பயிற்சி கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai