சுடச்சுட

  

  "அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்'

  By ஒசூர்  |   Published on : 29th November 2013 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என, இந்திய ஜனநாயக சோஷியல் கட்சி மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான்பாகவி தெரிவித்தார்.

  ஒசூரில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

  நெல்லை மாவட்டம், இடிந்தகரை அருகே உள்ள சுனாமி காலனியில் ஒரு வீட்டில் நிகழ்ந்த நாட்டு வெடிகுண்டு வெடிப்பில் 6 பேர் பலியான சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது.

  காவல் துறை இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து, உண்மையானக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.

  அதே நேரத்தில், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக அறவழியில் போராடும் தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுவது கண்டிக்கத்தக்கது.

  கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், அதை வாபஸ் பெறாமல் அவர்கள் மீது மேலும், மேலும் பொய் வழக்குகளை தொடர்ந்து போடுவது ஏற்புடையதல்ல.

  சமீபகாலமாக இடிந்தகரை அருகேயுள்ள கூத்தங்குழியில் தாது மணல் ஆலை பிரச்னையில் அந்த ஆலைக்கு ஆதரவாக, எதிராக இரு குழுவினருக்கிடையே பிரச்னை ஏற்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாக நடைபெறும் அசம்பாவித சம்பவங்களுடன், கூடங்குளம் போராட்டக் குழுவினரைத் தொடர்புபடுத்தி அவர்கள் மீது வழக்குகள் போடுவது அதிகரித்து வருகிறது.

  உதயகுமார், புஸ்பராயன், முகிலன் உள்பட நால்வர் மீது தற்போது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெறுவதுடன், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, கூடங்குளம் அணு உலைப் போராட்டக் குழுவினர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai