சுடச்சுட

  

  "உருது மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'

  By கிருஷ்ணகிரி  |   Published on : 29th November 2013 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் பள்ளிகளில் உருது மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, சிறுபான்மையினர் நல கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

  கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை அதன் தலைவர் பேராயர் எஸ்.பிரகாஷ் தலைமை நடைபெற்றது.

   இதில் அவர் பேசியது: தமிழக அரசு சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.சிறுபான்மையினர் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு சலுகைகளை அளிக்கிறது. தமிழக அரசு, சிறுபான்மையினருக்கு வழங்கும் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதன் மூலம் தான் பயனடைய முடியும் என்றார் அவர்.

  மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் எஸ்.சையத்காமில் ஷாகிப், ஜஸ்டின் செல்வராஜ், ஏ.எம்.ஜேம்ஸ், யூ.சுதிர் லோதா, கே.கலாமணி, சர்தார் மஜ்ஜித்சிங் நாயர், மாவட்ட வருவாய் அலுவலர் ப.பாலசுப்பிரமணியன், ஒசூர் சார் - ஆட்சியர் பிரவீண் பி. நாயர், மாவட்டப் பிற்பட்டோர் நல அலுவலர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், பங்கேற்ற சிறுபான்மையினப் பிரதிநிதிகள் கூறியது:

  தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால், உருது பேசும் மக்கள் உருது மொழியில் படிக்க இயலாத நிலை உள்ளது. உருது மொழிக்கு உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும். கிருஷ்ணகிரியில் உள்ள உருதுப் பள்ளியின் பழையக் கட்ட டத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai