சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியின் சார்பில், ஊராட்சி மன்றத் தலைவர்கள், செயலாளர்களுக்கு கணினிப் பயன்பாடுகள் குறித்த ஒரு வார காலப் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

  அந்தக் கல்லூரியின் வளாகத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்பை கல்லூரி முதல்வர் மு.சுப்பையா தொடக்கிவைத்தார். கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மந்திராசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பி.பெரியசாமி, கல்லூரி கணிப்பொறித் துறைத் தலைவர் ஆர்.ஜெயலட்சுமி, கணிப்பொறி பயன்பாட்டியல் துறைத் தலைவர் எஸ்.பிரான்ஸிஸ்கா ரொசாரியோ, வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், ஊராட்சி மன்றத் தலைவர்கள், செயலாளர்களுக்கு கணினியை இயக்குதல், பயன்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்

  படுகின்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai