சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களின் அட்டையில் உள்ள திருத்தங்களை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் டிச. 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.

  இதுகுறித்து கிருஷ்ணகிரி குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் விஜயராகவன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  கிருஷ்ணகிரி கோட்டத்துக்கு உள்பட்ட கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளில் வசிக்கும் குடும்ப அட்டைதார்களின் நலன் கருதி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் டிச.2-ஆம் தேதி நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்ட நாளில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்யும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட உள்ளன.

  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் உத்தரவின்பேரில், நடைபெறும் இந்த முகாமில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம். குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai