சுடச்சுட

  

  மணல் கடத்த முயன்ற லாரி  பறிமுதல்: ஓட்டுநர் கைது

  By கிருஷ்ணகிரி,  |   Published on : 29th November 2013 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூருக்கு மணல் கடத்த முயன்ற லாரியைப் பறிமுதல் செய்த போலீஸார், அதன் ஓட்டுநரையும் வியாழக்கிழமை கைது செய்தனர்.

  கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பக்கரையைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் சோமு (24). இவர், வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஜின்ஜனப்பள்ளி கிராமத்தில் பட்டா நிலத்திலிருந்து லாரியில் மணல் ஏற்றினாராம். தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சரவணன் சம்பவ இடத்துக்கு சென்றபோது, அனுமதியின்றி லாரியில் பெங்களூருக்கு மணல் கடத்துவது தெரிய வந்தது.

  இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், வேப்பனப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து, லாரியைப் பறிமுதல் செய்ததுடன், அதன் ஓட்டுநர் சோமுவையும் கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai