சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி அருகே உள்ள பெல்லாரம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் அண்மையில் நிறைவு பெற்றது.

  பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இரண்டு நாள் பயிற்சி முகாமிற்கு பள்ளித் தலைமையாசிரியர் ஆ.முருகேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாநில கல்வியியல் ஆராய்ச்சிப் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய இந்தப் பயிற்சி முகாமில் வளர் இளம் பருவ மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் உடல் மாற்றங்கள், வளர் இளம் பருவத்தை புரிந்துக் கொள்ளுதல், எச்.ஐ.வி. எய்ட்ஸ் தொற்று ஏற்படாமல் தங்களைக் காத்துக் கொள்வது, தொற்று நோயின் அடிப்படைத் தகவல்கள், போதைப் பழக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளுதல், நட்புறவை மேம்படுத்துவதில் தகவல் தொடர்பு, பாலியல் கொடுமை மற்றும் விழிப்புணர்வு குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது.

  பள்ளி ஆசிரியர்கள் வசந்தராஜா, விஜயன், ஞானப்பிரகாசம், வெங்கடாசலம், கருத்தாளுநர் தெய்வானை உள்ளிட்டோர் முகாமை ஒருங்கிணைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai