சுடச்சுட

  

  வனத் துறையைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  By ஒசூர்  |   Published on : 29th November 2013 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரி மாவட்ட வனத் துறையைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ராயக்கோட்டையில் வியாழக்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  ஒசூர் வனக் கோட்டத்தில் யானைகள், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் உயிர் இழப்புக்கு  உரிய நிவாரணம் வழங்க வேண்டியும், காலம் காலமாக வனப் பகுதியையொட்டி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பேரணி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ராயக்கோட்டையில் நடைபெற்றது.

  ராயக்கோட்டை பேருந்து நிலையத்தில் தொடங்கியப் பேரணி வனச் சரகர் அலுவலகத்தில் முடிந்தது. பின்னர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளரும், இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கத்தின் தேசியச் செயலாளருமான ராமகவுண்டர் பேசியது: 

  காட்டில் வாழும் யானைகளை விவசாயிகள் பயிர் செய்யும் விளை நிலங்களுக்குள் வராமல்  தடுக்க அகழி வெட்ட வனத் துறை யினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மின்சார முள்வேலி அமைப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.

  இதில் மேற்கு மாவட்டத் தலைவர் வண்ணப்பா, பொருளாளர் சுப்பிரமணிரெட்டி, துணைத் தலைவர் கண்ணன், துணைச் செயலாளர் கிருஷ்ணப்பா, ஒன்றியத் துணைச் செயலாளர்கள் சரவணக்குமார், ரமேஷ், ரவி, மல்லேசன், கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai