Enable Javscript for better performance
வரதட்சிணை: 5 பேர் மீது வழக்குப் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    வரதட்சிணை: 5 பேர் மீது வழக்குப் பதிவு

    By ஒசூர்,  |   Published on : 29th November 2013 05:25 AM  |   அ+அ அ-   |    |  

      ஒசூர் அருகே வரதட்சிணை புகார் தொடர்பாக 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    ஒசூர் அருகேயுள்ள பாகலூரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர், பாகலூரில் உள்ள தனியார் தொழில்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி யசோதா (20). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில், ரூ,2 லட்சம் வரதட்சிணைக் கேட்டு தன்னை துன்புறுத்துவதாக ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் யசோதா அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் புருஷோத்தமன், மாமனார் கிருஷ்ணன், மாமியார் பாப்பம்மா, உறவினர்கள் சீதா, ராமசாமி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai