சுடச்சுட

    

    ஒசூரில் கத்தியால் குத்தி இருவரிடம் ரூ.7 லட்சம் கொள்ளை

    By ஒசூர்  |   Published on : 30th November 2013 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒசூரில் இருசக்கர வாகன விற்பனை நிறுவன ஊழியர் இருவரை கத்தியால் குத்தி ரூ.7 லட்சம் கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

    ஒசூரில், கிருஷ்ணகிரி சாலையில் உள்ளது வி.எஸ். ஏஜென்சீஸ். இந்த நிறுவனம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

    இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் முனியப்பன் (35), சீனிவாசன் (40). இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு விற்பனை முடிந்ததும், வசூலானப் பணத்தை தர்கா அவுசிங் காலனியில் உள்ள கடை உரிமையாளர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றனர். அப்போது, அந்தப் பகுதி மின் தடையால் இருளில் மூழ்கி இருந்தது. இருளில் நின்ற மர்மக் கும்பல் இவர்கள் இருவரையும் கத்தியால் குத்தியது. அவர்களிடம் இருந்த ரூ.7 லட்சம் பணத்தை கொள்ளையடித்த அந்தக் கும்பல் தப்பி ஓடியது. ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த இருவரையும், அந்த வழியாகச் சென்றவர்கள் ஒசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல் ஆய்வாளர் சங்கர், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai