Enable Javscript for better performance
ஒசூரில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஒசூரில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

    By ஒசூர்  |   Published on : 30th November 2013 05:18 AM  |   அ+அ அ-   |    |  

    தமிழக அரசின் விரைவுப் பட்டா வழங்கும் திட்டத்தில், ஒசூர் சார் - ஆட்சியர் பிரவீண் பி.நாயர் 756 விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பட்டாக்களை வழங்கினார்.

    ஒசூரில் அக்டோபர் 11-ஆம் தேதி நடைபெற்ற அரசு விழாவில், 3,806 பேர்  விரைவுப் பட்டா மறுதல் திட்டத்தில் கூட்டுப் பட்டா, தனிப் பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

    ஒசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், 756 விவசாயிகளுக்கு ஒசூர் சார் - ஆட்சியர்

    பிரவீண் பி.நாயர் விவசாயிகளுக்கு தனிப் பட்டாக்களை வழங்கினார்.

    மீதியுள்ள பட்டாக்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவற்றையும் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இதில், ஒசூர் வட்டாட்சியர் அமீதுல்லா, துணை வட்டாட்சியர்கள் செந்தில்குமார், பெருமாள், முத்துபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    kattana sevai