சுடச்சுட

  

  சமூக ஜனநாயக கூட்டணியின் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜி.கே.மணி, காவேரிப்பட்டணத்தில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

  பாமக தலைமையிலான சமூக ஜனநாயகக் கூட்டணியின் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக, பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி போட்டியிட உள்ளார்.

  தொடர்ந்து, அந்தக் கட்சியினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  காவேரிப்பட்டணம், திம்மாபுரம், மலையாண்டஅள்ளி, பையூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை ஜி.கே. மணி, ஆதரவாளர்களுடன் மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

  மக்களவைத் தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்படாத நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாமக வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக வன்கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai