சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  By கிருஷ்ணகிரி  |   Published on : 30th November 2013 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாக, பொதுப் பணித் துறையினர் தெரிவித்தனர்.

  கர்நாடகத்தில், பெங்களூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

  இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாய்ந்து செல்லும் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

  தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணைக்கு வெள்ளிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, நொடிக்கு 593 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.

  அணையிலிருந்து நொடிக்கு 658 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 51.60 அடியாக இருந்தது.

  மொத்த கொள்ளளவு 52 அடி என்பதால், அணையிலிருந்து, தென்பெண்ணை ஆற்றில் கூடுதலாக நீர் வெளியேற்றப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai