சுடச்சுட

  

  அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், தன்னார்வலர்களுக்கான இணைப்புப் பயிற்சி வகுப்பு கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், மூன்று மாதங்களுக்கு தன்னார்வலர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

  இதையடுத்து, தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  பயிற்சி வகுப்பை இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசாமி தொடக்கிவைத்தார். ஏற்பாடுகளை உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai