சுடச்சுட

    

    நடத்துநரைத் தாக்கிய பயணி மீது வழக்குப் பதிவு

    By கிருஷ்ணகிரி  |   Published on : 30th November 2013 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரியிலிருந்து அம்பள்ளி கிராமம் நோக்கிச் சென்ற அரசு நகரப் பேருந்தின் நடத்துநரைத் தாக்கிய பயணியை போலீஸார் தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் சித்தன் (46). இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றுகிறார். இவர் கிருஷ்ணகிரியிலிருந்து அம்பள்ளிக்கு செல்லும் நகரப் பேருந்தில் வியாழக்கிழமை பணியில் இருந்தார். நகரப் பேருந்து நிலையத்திலிருந்து இரவு புறப்பட்ட அந்தப் பேருந்து மத்தூர் பிரிவுச் சாலையில் உள்ள கோத்தலகுட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்றது.

    அப்போது, பேருந்தில் இருந்த பயணி ஒருவர் மற்ற பயணிகளுக்கு இடையூறாக நின்று கொண்டிருந்தாராம். மேலும், அவர் பயணச் சீட்டையும் பெறவில்லையாம்.

    இதனால், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், அந்தப் பயணி, நடத்துநர் சித்தனைத் தாக்கிவிட்டு இருளில் தப்பி ஓடினாராம்.

    இதுகுறித்து சித்தன் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்த பர்கூர் போலீஸார், தப்பி ஓடியப் பயணி தீர்த்தகிரிபட்டியைச் சேர்ந்த அண்ணாமலையைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai