Enable Javscript for better performance
பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை அளிப்பு

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 30th November 2013 04:13 AM  |   அ+அ அ-   |    |  

    ஒசூர் மலபார் கோல்டு மற்றும் டைமன்ஸ் நிறுவனத்தின் அறக்கட்டளை சார்பில், அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். மலபார் கோல்டு நிறுவன விற்பனை மேலாளர் சோனி ஜோசப், மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குடும்ப வருமானம், தாய், தந்தை இல்லாத, மாற்றுத் திறனாளிகள் என அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை தலா ரூ.2 ஆயிரம் வீதம், கிருஷ்ணகிரி நகராட்சி, மத்தூர், போச்சம்பள்ளி, சாமல்பட்டி ஆகிய அரசுப் பள்ளிகளில் படிக்கும் 30 மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai