Enable Javscript for better performance
யானை தாக்கி விவசாயி சாவு- Dinamani

சுடச்சுட

    

    யானை தாக்கி விவசாயி சாவு

    By ஒசூர்,  |   Published on : 30th November 2013 04:13 AM  |   அ+அ அ-   |    |  

    தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், பெட்டமுகிலாளம் நெல்குந்தியைச் சேர்ந்தவர் நரசிம்மன் (50). இவர் அதேப் பகுதியில் விவசாயம் செய்து வந்தார். இவர் வியாழக்கிழமை இரவு கோவைக்குட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு வீடு திரும்பும் போது எதிரே யானைக் கூட்டம் வந்ததாம். ஒரு யானை அவரைத் தும்பிக்கையால் தூக்கி வீசியதாம். இதில் பலத்த காயமடைந்த அவர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  தகவல் அறிந்த ஒசூர் வன அலுவலர் உலகநாதன் அவருடைய உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரணத் தொகை ரூ.25 ஆயிரத்தை வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai