கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
ரத்தசோகை நோயைக் கட்டுப்படுத்த வாராந்திர இரும்புச் சத்து மாத்திரை வழங்கும் திட்டத்தின் கீழ் மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சாமல்பட்டி வட்டார மருத்துவர் சி.ராஜ்குமார் தலைமை வகித்தார்.
ஊத்தங்கரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜன் தலைமை வகித்து இந்தத் திட்ட தொடக்கிவைத்தார்.
மருத்துவக் கல்வியாளர் எஸ்.ராஜேந்திரபிரசாத், மத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் முருகம்மாள் ஸ்ரீராமுலு, ஊராட்சி மன்றத் தலைவர் எம்.ஈ பியாரேஜான், பள்ளித் தலைமையாசிரியை சாந்தா, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைலை ஆசிரியர் ஜெய்பால், நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சின்னபாப்பா நடராஜன், சமுதாய நலச் செவிலியர் சித்தம்மாள், ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் உமாராணி, கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவர் ஜே.ஜே.பிரபு, சுகாதார ஆய்வாளர்கள் எம்.மாதையன், எ.தமிழ்மாறன், கே.ரமேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மருத்துவ அலுலர் குணசேகரன் நன்றி கூறினார்.