கிருஷ்ணகிரி மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் களப் பணி மேற்பார்வையாளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உதவி இயக்குநர் தெரிவித்தார்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மீன் வளத் துறை உதவி இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ், செயல்படுத்தும் பணிகளைக் கண்காணிக்க களப் பணி மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பட்டப் படிப்பில் விலங்கியல் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினியை இயக்குவதில் கைதேர்ந்தவராக இருக்க வேண்டும்.
இந்தப் பணிக்கு மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும். இந்தப் பணியிடம் முற்றிலும் தாற்காலிகமானது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை சுய விவரங்களுடன் உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து கிருஷ்ணகிரி சந்தைப்பேட்டை, பாரதி நகரில் இயங்கும் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.