Enable Javscript for better performance
ஊத்தங்கரை, மத்தூரில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஊத்தங்கரை, மத்தூரில் வேட்பாளர் கே.அசோக்குமாரை ஆதரித்து அதிமுகவினர் புதன்கிழமை வாக்கு சேகரித்தனர்.
     தமிழக அரசின் சாதனைகளை எடுத்து கூறியும், நாடு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்றும், அதற்கு வேட்பாளர் கே.அசோக்குமாருக்கு வாக்களிக்க வேண்டும் என கூறி, வியாபாரிகள், வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
     இதில், நகரச் செயலர் பி.கே.சிவானந்தம், ஒன்றியச் செயலாளர் ஜிஆர்.நாராயணசாமி, மாநில நில வள வங்கித் தலைவர் பி.சாகுல்அமீது, தலைவர் வி.கிருஷ்ணன், துணைத் தலைவர் கே.ஆர்.சுப்பிரமணி, மகளிர் அணி நகரச் செயலாளர் ஜானகி, பேரூராட்சி உறுப்பினர்கள் வி.ஆறுமுகம், எ.விஜியகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     மத்தூரில்
     மத்தூரில் அதிமுக வேட்பாளர் அசோக்குமார் வீடு, வீடாகச் சென்று புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.
     இதில், மனோரஞ்சிதம் நாகராஜ் எம்எல்ஏ, ஒன்றியச் செயலாளர் ஸ்ரீராமுலு, ஊராட்சி மன்றத் தலைவர் எம்.ஈ.பியாரேஜான் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai