Enable Javscript for better performance
தண்ணீர் குடிக்கச் சென்ற போது  பள்ளத்தில் விழுந்த இரு யானைகள் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    தண்ணீர் குடிக்கச் சென்ற போது  பள்ளத்தில் விழுந்த இரு யானைகள் மீட்பு

    By  ஒசூர்,  |   Published on : 27th March 2014 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே வெவ்வேறு இடங்களில் தண்ணீர் குடிக்கச் சென்ற இடத்தில் பள்ளத்தில் விழுந்த இரு யானைகளை வனத் துறையினர் காப்பாற்றினர்.
     கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், அஞ்செட்டி அருகே ஒரே நாளில் இரு இடங்களில் தண்ணீர் குடிக்க வந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் யானைகள் கால் தவறி பள்ளத்தில் விழுந்தன.
     ஒசூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அஞ்செட்டி காப்புக் காடு உள்ளது. அங்கிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலுள்ள உப்பாணிக் காப்புக் காடு ஆனபெட்டாமடுவு பகுதியில் புதன்கிழமை தண்ணீர் தேடி வந்த 20 வயது பெண் யானை 30 அடி பள்ளத்தில் சேற்றில் சிக்கியது.
     தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் உலகநாதன், அலுவலர்கள் செüந்தர்ராஜன், அருணாச்சலம் மற்றும் வனத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று யானையை காப்பற்றினர்.
     பாறையில் சிக்கிய மற்றொரு யானை: அஞ்செட்டியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள பத்தல்மவுடு காப்புக் காட்டில் புதன்கிழமை மாலை தண்ணீர் குடிக்கச் சென்ற மற்றொரு யானை, தண்ணீர் தேங்கிய பாறையில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தது.
     சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் அந்த யானையைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஜேசிபி உதவியுடன் அந்த பெண் யானையை காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai