Enable Javscript for better performance
போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

    By  போச்சம்பள்ளி,  |   Published on : 27th March 2014 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் வட்டாட்சியர் அலுவலகத்தை பெண்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
     முதியோர் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர்.
     இதுகுறித்து திட்ட அலுவலர் ரேவதி கூறியது:
     தகுதியில்லாத பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை விண்ணப்பம் தள்ளுபடி ஆகியுள்ளதால், அதுகுறித்து தெரியாமல் வந்து கேட்கின்றனர்.
     தகுதியான பயனாளிகளுக்கு வர வேண்டிய தொகை வந்துள்ளது. அவை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி, அஞ்சலக சேமிப்புக் கணக்கில் உள்ளன என்றார் அவர்.
     பயனாளிகளின் சார்பில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஜே.கே. பெருமாள் கூறியது:
     தகுதியான பயனாளிகளுக்கும் முதியோர் உதவித் தொகை வழங்குவதை நீக்கியுள்ளனர்.
     தகுதியான பயனாளிகளுக்கு உதவித் தொகை கிடைக்கவில்லை என்றால், மக்களவைத் தேர்தளுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai